ஜோதிடமும் ஒரு டிகிரி படிப்புதான்
நாம் மூன்று அல்லது
நான்கு வருடம் ஏதேனும் ஒரு படிப்பை படித்து பட்டம்
வாங்குகின்றோம். ஜோதிடமும் பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட கல்விக்குரிய
படிப்புதான். இது அறிவியல் சார்ந்த படிப்பு.ஒருவருடைய ஜாதக கட்டத்தில்
கிரகங்கள் எப்படி அமைந்துள்ளன என்பதை பார்த்து அந்த ஜாதகருடைய கல்வி,
செல்வம், வேலை, குடும்பம்,வண்டி வாகன வசதி,சகோதர சகோதரர்கள்,தைரியம், தாய்
மற்றும் தந்தை, லாபம் மற்றும் நஷ்டம் , வெளிநாட்டு வேலை,ஆன்மிக சம்பந்தம்
என அனைத்து தரப்பட்ட விசயங்களையும் அறிந்து கொள்ளலாம்.பூமி உருண்டை
என்றும் அதற்கு வர்ணங்கள் உண்டு என்றும் மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள்
கூறுவதற்கு பல்லாயிரம் வருடங்கள் முன்பே இதனை தெரிவித்தவர்கள் நமது
ஞானிகள். அனைவரும் புறக்கண்ணால் கண்டவற்றை தமது அகக்கண்ணால் கண்டவர்கள்
நமது முன்னோர்களான சித்தர்கள். அகக்கண்ணால் கண்டவை எல்லாம் அறிவியல் அல்ல
என்று ஜோதிடத்தை அகல்ட் சயின்ஸ் என்று அழைத்தார்கள்.
ஞானிகளோ கிரகம்
சிவப்பு நிறக்கதிகளை வீசுகின்றது என்றும், குரு என்று அழைக்கபடுகின்ற
வியாழன் பொன்னிறமான கதிர்களை வீசுகின்றது என்றும் etc..முன்பே
தெரிவித்தார்கள்.நாம் அவர்கள் அளவுக்கு உயராவிட்டாலும், அவர்களுடைய
குறிப்புகளை படித்து பலன் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி.
This blog helps you to understand and learn astrology. Astrology is basically a science. It reveals the impact of planets on human beings.When a person born with good planet position, he will be a luckiest person and lead life without any disturbances.Lots of books were written by yogis on this topic and still the statement given by them are happening.
Friday, January 18, 2013
Monday, January 14, 2013
ஜோதிடம் ஓர் அறிமுகம்
ஜோதிடம் ஓர் அறிமுகம்
நாம் வசிக்கும் இந்த பூவுலகை கோடானு கோடி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் சுற்றி வருகின்றன. நமக்கு முன்னே பல நூற்றாண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த சித்தர்கள் மனிதனிடத்தில் இந்த கிரகங்கள் எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று தங்களது தீர்க்க தரிசனத்தால் அறிந்தார்கள்.தாம் அறிந்ததை மனித குலம் அறிந்து முன்னேற வேண்டும் என விரும்பி அந்த குறிப்புகளை எளிதியும் வைத்தனர்.
அவையாவன:அகஸ்தியர் நாடி ஜோதிடம், புலிப்பாணி ஜோதிடம், பிருஹத் ஜாதகம், ஜாதக அலங்காரம்,ஜோதிடக்கள ஞ்சியம்.

சித்தர்கள்
360 டிகிரி கொண்ட வான்வெளி மண்டலத்தை 12
பிரிவுகளாக பிரித்து அவற்றிற்கு மேஷம் முதல் மீனம் வரை பெயர்கள்
வைத்தனர்.
மேஷம் மற்றும் விரிசிக ராசிக்கு செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் அதிகம் என உணர்தனர்.செவ்வாய்க்கு கடவுளாக முருகப்பெருமானை உருவகபப் படுத்தினர். செவ்வாய் இத்துடன் சம்பந்தப்பட்டது.மேஷ ராசிக் காரர்கள் முருகக்கடவுளைப் போல் கோபம் கொண்டு தனியாக அமர்ந்து கொள்வர். இதனைப்போல் ஒவ்வொரு ரசிக்கும் கடவுள் மற்றும் உயிரினத்தை சம்பந்தப்படுதினர்.
இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் கிரகங்களால் பாதிப்பு உண்டு.நன்மையான பாதிப்பாக இருந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லியும், அல்லல்படும் உயிர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகள் செய்தும் வாழ வேண்டும்.
வாழ்க வளமுடன்.

Subscribe to:
Posts (Atom)