Monday, January 14, 2013

ஜோதிடம் ஓர் அறிமுகம்



ஜோதிடம் ஓர் அறிமுகம்
நாம் வசிக்கும் இந்த பூவுலகை கோடானு கோடி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் சுற்றி வருகின்றன. நமக்கு முன்னே பல நூற்றாண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த சித்தர்கள் மனிதனிடத்தில் இந்த கிரகங்கள் எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று தங்களது தீர்க்க தரிசனத்தால் அறிந்தார்கள்.தாம் அறிந்ததை மனித குலம் அறிந்து முன்னேற வேண்டும் என விரும்பி அந்த குறிப்புகளை எளிதியும் வைத்தனர்.

அவையாவன:அகஸ்தியர் நாடி ஜோதிடம், புலிப்பாணி ஜோதிடம், பிருஹத் ஜாதகம், ஜாதக  அலங்காரம்,ஜோதிடக்கள ஞ்சியம்.
சித்தர்கள்  360 டிகிரி கொண்ட வான்வெளி மண்டலத்தை  12 பிரிவுகளாக பிரித்து அவற்றிற்கு மேஷம் முதல் மீனம் வரை பெயர்கள் வைத்தனர்.
மேஷம் மற்றும் விரிசிக ராசிக்கு செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் அதிகம் என உணர்தனர்.செவ்வாய்க்கு கடவுளாக முருகப்பெருமானை உருவகபப் படுத்தினர். செவ்வாய் இத்துடன் சம்பந்தப்பட்டது.மேஷ ராசிக் காரர்கள்   முருகக்கடவுளைப் போல் கோபம் கொண்டு தனியாக அமர்ந்து கொள்வர். இதனைப்போல் ஒவ்வொரு ரசிக்கும் கடவுள் மற்றும் உயிரினத்தை சம்பந்தப்படுதினர்.
இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் கிரகங்களால் பாதிப்பு உண்டு.நன்மையான பாதிப்பாக இருந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லியும், அல்லல்படும் உயிர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகள் செய்தும் வாழ வேண்டும்.
வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment