Friday, January 18, 2013

ஜோதிடமும் ஒரு டிகிரி படிப்புதான்

ஜோதிடமும் ஒரு டிகிரி படிப்புதான்
நாம் மூன்று அல்லது நான்கு வருடம் ஏதேனும் ஒரு படிப்பை படித்து பட்டம் வாங்குகின்றோம். ஜோதிடமும் பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட கல்விக்குரிய படிப்புதான். இது அறிவியல் சார்ந்த படிப்பு.ஒருவருடைய ஜாதக கட்டத்தில் கிரகங்கள் எப்படி அமைந்துள்ளன என்பதை பார்த்து அந்த ஜாதகருடைய கல்வி, செல்வம், வேலை, குடும்பம்,வண்டி வாகன வசதி,சகோதர சகோதரர்கள்,தைரியம், தாய் மற்றும் தந்தை, லாபம் மற்றும் நஷ்டம் , வெளிநாட்டு வேலை,ஆன்மிக சம்பந்தம்  என அனைத்து தரப்பட்ட விசயங்களையும் அறிந்து கொள்ளலாம்.பூமி உருண்டை என்றும் அதற்கு வர்ணங்கள் உண்டு என்றும் மேலை நாட்டு  ஆராய்ச்சியாளர்கள் கூறுவதற்கு பல்லாயிரம் வருடங்கள் முன்பே இதனை தெரிவித்தவர்கள் நமது ஞானிகள். அனைவரும் புறக்கண்ணால்  கண்டவற்றை தமது  அகக்கண்ணால்  கண்டவர்கள் நமது முன்னோர்களான சித்தர்கள். அகக்கண்ணால்  கண்டவை எல்லாம் அறிவியல் அல்ல என்று ஜோதிடத்தை அகல்ட் சயின்ஸ் என்று அழைத்தார்கள்.
ஞானிகளோ  கிரகம் சிவப்பு நிறக்கதிகளை வீசுகின்றது என்றும், குரு என்று அழைக்கபடுகின்ற  வியாழன்  பொன்னிறமான கதிர்களை  வீசுகின்றது என்றும் etc..முன்பே தெரிவித்தார்கள்.நாம்  அவர்கள் அளவுக்கு உயராவிட்டாலும்,  அவர்களுடைய  குறிப்புகளை படித்து பலன் தெரிந்து   கொள்ளலாம்.
நன்றி.

1 comment:

  1. sir, good start of a blog.
    here in this link, you can find courses offered in India and other countries for astrology.
    http://www.indiamike.com/india/yoga-spirituality-and-religion-in-india-f54/jyotish-vedic-astrology-universities-schools-t128477/

    ReplyDelete